சுவிஸ்

வோ மாநிலத்தில் ட்ரெயின் சேவை முடக்கம்: லோசான் – ஜெனீவா பயணிகள் தவிப்பு

வோ மாநிலத்தில் (Vaud) இன்று செவ்வாய்க்கிழமை மாலை ட்ரெயின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. லோசான் (Lausanne) – ஜெனீவா (Genève) இடையே ட்ரெயின்கள் ஓடவில்லை.

கிளான் (Gland) முதல் கொப்பே (Coppet) வரையிலான பாதையில் ட்ரெயின்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நியோன் (Nyon) ரயில் நிலையத்திலும் போக்குவரத்து முற்றிலும் நின்றுவிட்டது.

இதனால் இப்போதைக்கு லோசானுக்கோ ஜெனீவாவுக்கோ ட்ரெயினில் போக முடியாது. இந்த இரண்டு பெரிய நகரங்களுக்கு இடையே பயணம் செய்பவர்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள்.

ஒரு நபர் சம்பந்தப்பட்ட விபத்தே இதற்குக் காரணம் என்று சுவிஸ் ரயில்வே நிறுவனம் (CFF) தெரிவித்துள்ளது. குறைந்தது இரவு 10 மணி வரை இந்தத் தடங்கல் நீடிக்கும்.


மூலம்: Le Matin
புகைப்படம்: John Michael Wilyat / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button