சுவிஸில் “ஸ்னஸ்” (Snus) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், பெர்ன் நாடாளுமன்றத்தில் சில அரசியல்வாதிகள் புகையிலை நிறுவனங்கள் சொல்லும் வாதத்தையே பேசுகிறார்கள்.
ஸ்னஸ் என்பது உதட்டுக்கு அடியில் வைக்கும் சிறிய நிகோட்டின் பை. இளைஞர்கள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். 2016-இல் சுவிஸில் 80 டன் விற்பனையானது. 2024-இல் 455 டன். அதாவது கிட்டத்தட்ட 6 மடங்கு. இனியும் இது கூடும் என்று மத்திய அரசு கணிக்கிறது.
“ஸ்னஸ் சிகரெட்டை விட ஆரோக்கியமானது. புகைப்பவர்களின் எண்ணிக்கையையும் குறைக்கும்” என்று புகையிலை நிறுவனங்கள் சொல்கின்றன. புகையிலைத் தடுப்பு அமைப்புகள் இதை மறுக்கின்றன. ஸ்வீடனில் சிகரெட்டிலிருந்து ஸ்னஸுக்கு மாறுபவர்கள் மிகக் குறைவு என்கின்றன. புதிதாகப் பழகுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்றும் சொல்கின்றன. ஸ்னஸால் புகைப்பது குறைகிறதா என்று சொல்ல போதுமான ஆய்வுகள் இல்லை என்று ஸ்வீடன் சுகாதார அமைப்பும் கூறியுள்ளது.
பெர்ன் நாடாளுமன்றத்தில் சிலர் ஸ்வீடனை முன்மாதிரியாகக் காட்டுகிறார்கள். கட்டுப்பாடுகள் குறைவாக இருப்பதே நல்லது என்கிறார்கள். மிட்டே (Mitte) கட்சித் தலைவர் பிலிப் மத்தியாஸ் ப்ரெகி (Philipp Matthias Bregy) இது தொடர்பாக இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். புகையிலைத் தொழில்துறையுடன் தனக்குத் தொடர்பு இல்லை என்கிறார். ஸ்வீடன் மாதிரியை சுவிஸ் மத்திய அரசு ஆராய வேண்டும் என்பதே தன் நோக்கம் என்கிறார். இளைஞர்கள் ஆன்லைனில் புகையிலைப் பொருட்களை வாங்க முடியாதபடி அடையாளச் சரிபார்ப்பு வேண்டும் என்றும் சொல்கிறார்.
தடுப்பு அமைப்புகளும் ஸ்வீடனை முன்மாதிரியாகவே பார்க்கின்றன. ஆனால் ஸ்னஸுக்காக அல்ல. புகைப்பிடிக்கத் தடை, சிகரெட் விலை அதிகம் என்ற கடுமையான கொள்கைக்காகத்தான்.
மூலம்: SRF
புகைப்படம்: Swenico / Unsplash





