அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

 

அதற்கமைய, பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் அடங்குவதாக நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறி வித்துள்ளார்

 

அதேநேரம் எயார்பஸ் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை (28)  கொழும்பு நிரந்தர நீதாயம் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பான அறிக்கையை இம்மாதம் 30 ஆம் திகதி தமது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button