தமிழீழம்

“தியாக தீபம் திலீபன் அஹிம்சை வழியிலேயே உயிர் நீர்த்தார்” — சிஐடி விசாரணையில் யாழ். மாநகர முதல்வர்

யாழ்ப்பாணம் , நல்லூர் பகுதியில் தியாக தீபத்தின் நினைவாலயத்தில் , தியாக தீபத்தின் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரிடம் இரு மணி நேர விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.

 

மாநகர சபைக்கு நேற்றைய தினம் புதன்கிழமை சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் , முதல்வரின் அலுவலகத்தில் வைத்து, முதல்வரிடம் சுமார் இரு மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்

அதில் குறிப்பாக , திலீபன் , விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என தெரிந்தா சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு முதல்வர் ,அவர் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என தெரியும். ஆனால் அவர் ஆயுத போராட்டத்தில் உயிரிழக்கவில்லை. அஹிம்சை வழியில் போராடியே உயிர் நீர்த்தார். என பதில் அளித்துள்ளார்

தொடர்ந்து , சிலை உருவாக்கப்பட்ட இடம் , சிலையை வைத்தவர்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது

தியாக தீபத்தின் 39ஆம் ஆனது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வான செப்டெம்பர் 15ஆம் திகதி வெண்கல சிலை வைக்கப்பட்டு , தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் , செப்டெம்பர் 27ஆம் திகதி நினைவிவாலயத்திற்கு யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் , இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்

அதனை தொடர்ந்து சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததுடன் , சிலையை நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ளனர்.

அந்நிலையில் சிலை வைக்கப்பட்டபட்டமை தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், 17 ஆவது நபராக முதல்வரிடம்  விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button