இலங்கைதமிழீழம்

வடபகுதி மீனவர்களின் பிரச்சினையை தீர்காவிட்டால் தென்பகுதி மீனவர்களை இணைத்து போராடுவோம்

“அழகான வாழ்க்கையை உருவாக்க வந்த அரசாங்கம், மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கியுள்ளது” என மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம்சாட்டியுள்ளார்

 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கடற்றொழில் இணையங்களின் ஊடக பேச்சாளர் அ.அன்னராசா, எம்.பி.சுப்பிரமணியம் ஆகியோருடன் இணைந்து மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே ஊடக சந்திப்பினை நடத்தி இருந்தார்.

அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து கடல் வளங்களைக் கொள்ளையடிப்பதாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது.

“டொலர்களைத் தேடுவதாகக் கூறும் அரசாங்கம், இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் வளங்களைக் கொள்ளையடிக்கும்போது மௌனமாக இருக்கிறது.

நயினாதீவில் படகுகளை நிறுத்துவதற்குத் துறைமுக வசதி இல்லை. காரைநகர் கடல் முகத்துவாரம் மணல் நிரம்பிக் காணப்படுகிறது.

இவ்வாறான பல்வேறு பிரச்சினைகள் தொடர்கின்றன. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் நாடு சுபீட்சமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், யாருக்கு அந்தச் சுபீட்சம்?”

எரிபொருள் விலை உயர்வு, மீன்பிடி வலைகளின் தரம் தொடர்பான பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சனைகளை மீனவர்கள் எதிர்கொள்கின்றனர் என தெரிவித்தார்.

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் கடற்றொழில் இணையங்களின் ஊடக பேச்சாளர் அ.அன்னராசா கருத்து தெரிவிக்கும் போது,    ,

எமது பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ச்சியாக பல தடவைகள் பேசி இருக்கிறோம் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பணிப்பாளருடன் இது தொடர்பில் முறைப்பாடுகளை முன் வைத்திருக்கின்றோம் இருப்பினும் எந்த விதத்திலும் தீர்வு  கிடைக்கவில்லை..

எமது பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களிலும் முன்னைய  கடற்தொழில் அமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அவை எதற்கும் செவி சாய்க்கவில்லை.

இப்போது புதிய அரசாங்கத்தின் புதிய கடற்தொழில் அமைச்சர்  கூட பாராபட்சமாகவே நடந்து கொள்கிறார்.

எனவே எமது தொடர்ச்சியான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இல்லாவிட்டால் நாங்கள் பாரிய போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.

தென்னிலங்கை மீனவர்களுடனும், தென் இலங்கை பிரதிநிதிகளோடு இணைந்து தென்னிலங்கையிலும் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button