சுவிஸ்

சுவிட்சர்லாந்தில் திருமணமான தம்பதிகள் 2027 முதல் இரட்டைக் குடும்பப் பெயரைப் பயன்படுத்தலாம்!

சுவிட்சர்லாந்தில் 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல், திருமணமான தம்பதிகள் மீண்டும் இரட்டைக்குடும்பப்பெயர்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றம்நிறைவேற்றியசிவில் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய சட்டத்தின்படி, தம்பதிகள் தங்கள் இரு குடும்பப் பெயர்களையும் இணைத்து, இடையில்இணைப்புக்குறியுடன்அல்லது அது இல்லாமலும் பயன்படுத்த முடியும். எனினும், இந்தச் சலுகைஅவர்களின்பிள்ளைகளுக்குப் பொருந்தாது.

2013ஆம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்தில் இரட்டைக் குடும்பப் பெயர்களைப் பயன்படுத்த அனுமதி இருந்தது.அதன்பின்னர் திருமணம் செய்யும் தம்பதிகள் பொதுவான குடும்பப் பெயரைத் தெரிவு செய்யவோ அல்லதுதத்தமதுபெயர்களைத் தக்கவைத்துக் கொள்ளவோ வேண்டியிருந்தது. அதற்குப் பதிலாக, அதிகாரபூர்வமற்றஇரட்டைப்பெயரை மட்டுமே பயன்படுத்த முடிந்தது.

புதிய திருத்தத்தின்படி, ஏற்கனவே திருமணமானவர்களும் 2027ஆம் ஆண்டு முதல் பதிவாளர்அலுவலகத்தில்விண்ணப்பித்து அதிகாரபூர்வ இரட்டைக் குடும்பப் பெயரைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், தற்போது கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளில் குறிப்பிடப்படும் அதிகாரபூர்வமற்றஇரட்டைப்பெயரை நீக்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான தொழில்நுட்பமாற்றங்களைச்செய்வதற்கு இடைக்கால அவகாசம் வழங்கப்படும்.

இந்த இடைக்கால அவகாசம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதுதொடர்பானஅறிவிப்பு உரிய காலத்தில் வெளியிடப்படும் என சுவிஸ் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button