ஜோதிடம்

இன்றைய (28.09.2026) ராசிபலன்

மேஷம்: மகனின் வேலை, மகளின் திருமணம் என்று அலைச்சல் இருக்கும். காரியத் தடைகள் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ரிஷபம்: களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தினரால் சேமிப்பு கரையும். பூர்வீக வீட்டை சீரமைத்து கட்டுவீர். வாகனத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

கடகம்: குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

சிம்மம்: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

கன்னி: குடும்பத்தில் யாரைப் பற்றியும் குறை சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புதிய பங்குதாரர்களின் கருத்து களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும். உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: முக்கிய பிரமுகர் அறிமுகமாவார். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மனைவி, பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அளிப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். புதிய பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். கணவன் மனைவிக்குள் இருந்த கசப்புகள் விலகும். வீண் அலைச்சல் குறையும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

தனுசு: சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். பொறுப்பு, பதவிகள் தேடி வரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. மனைவி, தந்தையின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை தருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மகரம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் கவுரவ பதவி தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.

கும்பம்: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக வீட்டை அதிக செலவு செய்து சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button