இலங்கைதமிழ்

22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவும்; இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்து

முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில்  சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தியுள்ளது.

 

சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, குறித்த அரசியலமைப்புத் திருத்தமானது மக்களின் இறைமையுடன் தொடர்புடையது என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மேலும் கோரியுள்ளது.

 

22-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் மூலம்:

 

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65-இல் இருந்து 67 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

 

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63-இல் இருந்து 65 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

 

இதன்மூலம் மாகாண மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button