தமிழீழம்

உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது உறவினர் ஒருவர் அந்த உழவு இயந்திரத்தை இயக்கி, பிள்ளைகள் இழுவை பகுதிக்குள் இருக்கும்போதே முன்றலில் திருப்புவதற்கு முற்பட்டுள்ளார்.

இதன்போது உழவு இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை, பின் சக்கரத்திற்குள் சிக்கியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தினால் படுகாயமடைந்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button