சுவிஸ்

சுவிட்சர்லாந்தில் மீண்டும் அதிரடியாக அதிகரித்த எரிபொருள் விலைகள்!

சுவிட்சர்லாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. ஒரு லீற்றருக்கு 5 சதங்கள் வரை விலை உயர்ந்துள்ளதாக சுவிஸ் சுற்றுலா கழகத்தின் (TCS) சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெட்ரோலின் சராசரி விலை 2.4% அதிகரித்து 2.16 சுவிஸ் பிராங்குகளாகவும், 98 ஒக்டேன் பெட்ரோலின் விலை 2.3% உயர்ந்து 2.27 பிராங்குகளாகவும் உள்ளது.

டீசல் விலையும் 2.1% அதிகரித்து ஒரு லீற்றர் 2.45 பிராங்குகளாக உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் நடுப்பகுதியில் பதிவான வருடாந்த உச்ச விலையான 2.46 பிராங்குகளுக்கு மிக அருகில் உள்ளது.

சர்வதேச எரிபொருள் சந்தையில் நிலவும் பதற்றம் மற்றும் ரைன் நதியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துச் சிக்கல்கள் ஆகியவை விலை உயர்வுக்குக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இதனால் சுவிட்சர்லாந்துக்கான எரிபொருள் இறக்குமதிச் செலவும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், சர்வதேச சந்தையில் வடகடல் பிரென்ட் மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 105 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. எனினும், ஈரான் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் நிலவிய சுமார் 72 டொலர் விலையைவிட இது அதிகமாகும்.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள், சுவிட்சர்லாந்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விலைகளில் பிரதிபலிக்கச் சிறிது காலம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button