“கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை ஏற்கிறோம்” என்ற கனடா தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து இலங்கை பாடம்கற்க வேண்டும்.
கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷ், நேற்று என் பக்கத்தில் இருந்தபடி பகிரங்கமாக, “கனடாவில் எங்களின் சொந்த அனுபவம் இருக்கிறது. ஆதிகுடிகள் தொடர்பில் கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆதிகுடிகளுடனான இனநல்லிணக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அது தொடர்பில் நாம் பணியாற்றுகிறோம்....