
தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சிலாந்தினரால் ஊரி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கைவண்ணப் பட்டறையில் சிறார்கள், இளையவர்கள் என பலர்
பங்கெடுத்து தங்கள் திறன்களை வர்ணம் பூசல், கைவினை செதுக்கல்கள் ஊடாக தங்கள் ஆக்கங்களை மிகவும் நேர்த்தியாக படைத்திருந்தனர் இவர்கள் மாவீரர்கள் நினைவாக இந்த படைப்புகளை உருவாக்க தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சிலாந்தின் அங்கத்தவர்களின் வழிகாட்டல்களை மேற்கொண்டிருந்தனர்.
இன்று (12.11.2023) மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டத்தை திறம்பட செய்துமுடிக்க ஊரி மாநிலத்தின் பாடசாலை ஆசிரியர், பெற்றோர், இளையவர்கள் போன்ற பலரின் உதவியடன் கைவண்ணப் பட்டறை சிறப்புற இடம்பெற்றிருந்தது.
























இன்றைய பட்டறையில் சிறார்கள், இளையவர்களுக்கு தமிழர்களாகிய நாம் ஏன் மாவீரர்களை போற்ற வேண்டும் ? யார் அவர்கள் ? அவர்கள்
எமக்கு எத்தகைய தியாகங்களை செய்துள்ளார்கள் போன்ற விடயங்களையும் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சிலாந்தின் உறுப்பினர்கள் எடுத்துக்கூறியிருந்தனர்.
ஈகைச்சுடர் ஏற்றி் மாவீரர்களை வணங்கி அகவணக்கத்துடன் ஆரம்பமான கைவண்ணப் பட்டறை தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிறைவுக்கு வந்தது.
தகவல்: தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்து.