திருமலை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலகமுன் கொழும்பில் வசிக்கும்
சிங்களத்தின் முகவர் சுமந்திரன் பதவி விலக வேண்டுமென பல தமிழ் ஆர்வலர்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுமந்திரன் நியமன பாராளுமன்ற உறுப்பினராக திரு சம்பந்தரால்
நியமிக்கப்பட்டார்.
கொழும்பு வாசியான சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக வந்த நாள் தொடக்கம் முழுமூச்சாக தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டுக்
கொண்டிருக்கிறார்.
உதாரணமாக

1: வவுனியாவில் சிங்களக் குடியேற்றத்தை ஊக்குவித்து அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுடன் இணைந்து
நூற்றுக்கணக்கான காணி உறுதிகளை சிங்களவருக்கு வழங்கினார்.
இதேநேரம் போரினால் பாதிக்கப்பட்ட
தமிழர்கள் காணி எதுவும் இன்றி பரிதாப
நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறர்கள் .

2: ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில்
ஆயிரம் பெளத்த விகாரைகள் தமிழர்
பிரதேசத்தில் கட்டப்படும் என்று கூறிய
பின்பும், சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகத் தீவிரமாகச் செயற்பட்டார்.

3: ஆயிரம் பெளத்த விகாரைகள் கட்டும் திட்டத்தின் கீழ்தான் பெளத்த
விகாரைகள் தமிழ்ப் பிரதேசங்களில்
கட்டப்பட்டு வருகின்றன.
குருந்தூர் மலை, தையிட்டி, கன்னியா-வெந்நீருற்று, வெடுக்குநாறி ஆகியவை சிறு உதாரணங்கள் ஆகும்.

4:சுமந்திரன் ஐ.நா உயர் அதிகாரிகளையும்,
மேற்குலக இராஐதந்திரிகளையும்
சந்திக்கும் போது ஈழ தமிழர்கள் இனப்
படுகொலைக்கு ஆளாக வில்லை என்றும்,
தமிழர்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்( ICC) விசாரணை தேவையில்லை என்றும், தான்தான் தமிழர்களின் பிரதிநிதி எனக்
கூறி தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை பல முறைதடுத்தார்.

5: தமிழினப்படுகொலைக்கும், தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தியதற்கும்
எதிராக ஜெனிவாவில்உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தீர்மானங்களை பலவீன படுத்துவதிலும்
தடைகள் ஏற்படுத்துவதிலும் சிறிலங்கா
அரசுடன் இணைந்து சுமந்திரன் செயற்பட்டார்.
மேலும் சிறிலங்கா அரசை இனப்படுகொலை மற்றும் போர்குற்றத்
திலிருந்து தப்பிக்கொள்ள சிறிலங்கா இனப்படுகொலை அரசுக்கு
நாலுவருட கால அவகாசம் எடுத்துக்
கொடுத்தார்.

6: பல்வேறு தமிழின விரோத செயற்பாட்டின் காரணமாக, சுமந்திரனுக்கு
நன்றிக்கடனாக தமிழர்கட்கு பயங்கர அழிவுகளை
ஏற்படுத்திய விசேட அதிரடிப் படை, மோட்டார் சைக்கிள் படை
என்பன சுமந்திரனின் பாதுகாப்பிற்காக
சிங்கள அரசால் வழங்கப்பட்டது .

7: தனக்கு வழங்கப்பட்ட அதே விசேட
அதிரடி படையினர் உதவி கொண்டு பல தமிழர்களை சித்திரவதைக்கு சுமந்திரன் உள்ளாக்கினார் .
உதாரணமாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மாமனிதர் ரவிராஜின் மனைவி தேர்தலில் வெற்றி பெற்றதைத் தடுக்க
இவர் பல மீள் எண்ணிக்கைகளைச்
செய்யும்படிகோரி சசிகலா ரவிராசை
தோற்கடித்து, திருட்டுத்தனமாக பாராளுமன்ற
உறுப்பினராகி விட்டார்

8: மேற்குறிப்பிட்ட அநீதியை எதிர்த்து
வாக்கு எண்ணும் இடத்தில் மக்கள்
கோசங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியபோது தனது விசேட அதிரடிப்
படையை ஏவிவிட்டு பலரை தாக்கி காயப்படுத்தினார்.
சசிகலா ரவிராஜ் மற்றும் அவரது பிள்ளைகளும், மயிரிழையில் இத்தாக்கு தலில் இருந்து பலர் அவர்களைச்சூழ்ந்து அரணாக நின்ற
காரணத்தினால் உயிர்தப்பினர்கள் .

9: பல முன்னாள் போராளிகளை தன்னை கொலை செய்ய வந்ததாக கூறி அரச உதவியுடன பயங்கரவாத தடை சட்டத்தில்
சிறையில் அடைப்பித்தார்
இவர்களில் பலர் கடும் சித்திவதைக்குள உ ள்ளா னார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

10: சுமந்திரன் கிழக்கு மாகாணத்தில்
பெரும்பான்மையாக தமிழர்,வாழும்
மட்டக்களப்பு மாவட்
டத்திற்கு பெளத்த
சிங்கள பின்னணியைக் கொண்ட
சாணக்கியனை தமிழரசுக்கட்சியின்
வேட்பாளராக பலத்த மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில்
நியமித்தார்.
சாணக்கியனின் தாயார் ஒரு பெளத்த
சிங்களவர் என்பதும், இவர் வளர்ந்தது
தனது தாயாரின் பொளத்த சிங்கள உறுவினர்களுடன் கண்டியில்தான்
என்பதும் பெளத்த கோயில்களுக்கு சென்றுதான்
வழிபாடு நடத்தினார் என்பதும்
போர் நடந்த காலத்தில், சாணக்கியன்
கோத்தாபாயாவுடன் நெருங்கிச்
செயற்பட்டார் என்பதும் குறிப்பித்தக்கது. சிறிலங்கா சுதந்திரக்
கட்சியின் வேட்பாளராக கோத்தபாயாவால் நிறுத்தப்பட்டார்.
மேலும் பிள்ளையானின் வெற்றிக்காக தீவிரபிரச்சாமும் செய்தார் ,இவர் தமிழர் மத்தியில் வளரவில்லை என்பதும் போர்காலத்தில்
தமிழர்களின் துயரங்களை அறியாதவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

11: சுமந்திரன் தமிழர்களை முழு முட்டாளாக்கும் செயலை தொடர்ந்து நிகழ்த்திவருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஹர்த்தாலுக்கு
தமிழர்களை வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும், முழுப் புறக்கணிப்பு
செய்யுமாறு கோரிக்கை விடுத்துவிட்டு
தான் மட்டும் வேலைக்கு சென்று பாராளுமன்ற சம்பளம் எடுத்துள்ளார்.

சம்பந்தன் தமிழினத்திற்கு துரோகம் இழைத்தாலும் அவரைவிட சுமந்திரன் தமிழர்களின் இருப்பை நாசமாக்கும் பல படுபாதக செயல்களை முன் எடுத்து வருபவர் என்ற ரீதியில் அவர் முதலில் பதவி விலக வேண்டும் என மக்கள் கருத்துகூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்