
அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று சிங்கள பயங்கரவாத பெளத்த பிக்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தென்தமிழீழன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் கடந்த 25-10-2023 மாலை அம்பிட்டிய சுமனரத்ன மேற்கொண்ட செயற்பாடுகளால் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலை உணர்வதாக தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பயங்கரவாத பௌத்த பிக்குவின் பேச்சுக்கு எதிராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் மாத்திரம் இதுவரை எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகின்றார். இவரை ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் வடகிழக்கில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இது தொடர்பாக எதிர்ப்பையோ, கருத்தையோ வெளிப்படுத்தாமை தமிழ் மக்களிடையே இவர்கள் மீது ஒரு வெறுப்பலையை உண்டுபண்ணியுள்ளதாக. அறியக்கூடியதாக உள்ளது. மற்றும் இவர்கள் நாட்டில் இருந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்கிறார்களோ எனம் எண்ணத்தை உருவாக்கி உள்ளது.