
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் சாவகச்சேரி சந்தையில் 27.10.2023 மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல்.
சாவகச்சேரிப் படுகொலை 27.10.1987
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ்-கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி நகரமானது, தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரதான நகரமாகும்.
தென்மராட்சி மக்களின் பிரதான சந்தை இங்கேயே அமைந்துள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் கூடுதலாக உள்ள நகரமாகும்.

1987 ஒக்டோபர் 27 ம் திகதி கந்தசட்டி கடைசி நாளாகும். மதியம் 12 மணியளவில் நகரத்தின் வழியாக சூரன் போருக்குரிய சூரன்; அவ்வீதியால் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தது. ஏராளமான பக்தர்களுடன் வீதியுலா வந்த சூரன் நகரத்தின் மையப்பகுதிக்க வந்துகொண்டிருந்தது.
அவ்வேளை இந்தியப்படைக்கு சொந்தமான இரண்டு எம்.ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானுர்திகள் வீதியுலா வந்துகொண்டிருந்த தமிழ் மக்கள் மீது கண்முடித்தனமாக றொக்கற் தாக்குதலைமேற்கொண்டதன. றொக்கட் குண்டுகளால் சந்தைப்பகுதியில் நின்ற, வீதியுலா வந்த மக்கள் 68 பேர் உயிரிழந்தனர். 175 பேர் வரையில் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் –
‘ நாங்கள் சூரனுடன் விதியுலா வந்து கொண்டிருந்தோம். தீடீரென இரண்டு உலங்கு வானுர்திகள் நகரத்தை வட்டமிட்டது. நாங்கள் சூரனுடன் வீதியுலா வந்ததாலும் பெருமளவிலான மக்கள் நின்றதாலும் இந்திய இராணுவத்தின் முதலைக்கெலியைக்கண்டு பதறாமால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தோம். ஆனால் திடீரென வெடிச்சத்தங்கள் கேட்ட திகைப்படைந்த எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் சிதறி ஓடினார்கள், சிலர் படுத்தார்கள், சிலர் கையை உயர்த்தி காட்டினார்கள். ஆனால் இந்தியக் கெலிகளின் தாக்குதலின் உக்கிரம் குறையவில்லை. அந்தந்த இடங்களிலேயே பலர் உடல்சிதறி பலியானார்கள். வீதியுலா வந்த சூரனும் சிதைந்தது. காயமடைந்தவர்களை யாழ் வைத்தியசாலைக்கம் எடுத்து செல்லமுடியவில்லை. சரியான சிகிச்சை வழங்கமுடியாமல் பலர் உயிரிழந்தனர் என்றார்’.
அப்பாவிகள் மீது தாக்கதல் நடத்தியதற்கு ஏதாவது காரணமிருக்கதா? என கேட்டதற்கு….
‘குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய காரணங்கள் ஏதுவுமில்லை. அப்பகுதியில் சண்டையும் நடக்கவில்லை. அருகில் இராணுவ முகாம்களும் இருக்கவில்லை. சம்பவதினம் காலை நாவக்குழியிலிருந்து முன்னேறிய இராணுவம் படைகள் கோப்பாய் வெளியினுடாக நகர முயன்ற போது பாரிய இழப்பை சந்தித்தனர். அதற்கு பழிவாங்கும் நோக்குடனேயே அப்பாவித் தமிழ் மக்களை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம், வேறு குறிப்பிடும்படியான காரணங்கள் எதுவுமில்லை’ என எதிர்வுகூறினார்.
இந்தியப்படைகள் திட்டமிட்டு மேற்கொண்ட படுகொலைச்சம்பவங்களில் தென்மராட்சி மக்களால் மறக்க முடியாத சம்பவங்களில் இதுவுமொன்றாகும்.
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் சாவகச்சேரி சந்தைப்பதியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் விபரம் பின்வருமாறு –
01 இளையதம்பி நாகராசா – கமம் – 50 02 இராசையா திரவியம் மரியாம்பிள்ளை – விவசாயம் -32 03 இராசநாயகம் நந்தினி – மாணவி – 20 04 இராசநாயகம் அருந்தவராசா – மாணவன் – 13 05 இராசா சிறிதரன் – வியாபாரம் – 26 06 இராசதுரை இராசேந்திரபோஸ் – மாணவன் – 18 07 இராசசிங்கம் மனோகரன் – கைத்தொழில் – 38 08 இராசசிங்கம் கௌரிதாஸ் – மாணவன் – 20 09 நாகமுத்து தங்கம்மா – வீ.பணி – 66 10 நாகமுத்து தவராசா – 27 11 நாகராசா புஸ்பராசா – 13 12 நாகராசா தனலட்சுமி – 21 13 நாகராசா மகேஸ்வரி – 41 14 நாகராசா சண்முகராசா – 10 15 நல்லதம்பி இராசையா – வியாபாரம் – 56 16 கனகு பொன்னு – 57 17 கந்தையா மனோன்மணி – வியாபாரம் – 58 18 கந்தன் தங்கம் – வியாபாரம் – 51 19 கந்தசாமி வைத்தீஸ்வரசர்மா – பூசகர் – 26 20 வைத்தீஸ்வரசர்மா கலைச்செல்வன் – 2 21 கந்தசாமி கெந்தீஸ்வரன் – தொழிலாளி – 20 22 கார்த்திகேசு பெனடிக்ற் மத்தியூஸ் – வியாபாரம் – 32 23 கணபதி மயில்வாகனம் – முகாமையாளர் – 40 24 பழனியாண்டி கனகரத்தினம் – ஊழியர் – 34 25 பிள்ளையாங்குட்டி துரைச்சாமி – சாரதி – 49 26 பிலிப்பு இராசேந்திரம் – மேசன் – 42 27 வைத்திலிங்கம் மயில்வாகனம் – வியாபாரம் – 45 28 தம்பு ஜெயரத்தினம் – தொழிலாளி – 22 29 தம்பிராசா சந்திரமோகன் – மாணவன் – 21 30 மார்க்கண்டு துரைராசா – சுருட்டுத்தொழில் -55 31 முருகேசு நடராசா – இ.போ.ச – 50 32 முருகேசு சிவசுப்பிரமணியம் – இரும்பு வேலை – 41 33 ஆனந்தசாமி அருந்தவசிவனேசன் – சாரதி – 25 34 ஆறுமுகம் விஸ்வநாதன் – வியாபாரம் – 31 35 அல்பிரட் நொபேட் லூயிஸ் ஸ்ரிபன் – தேநீர்க்கடை ஊழியர் – 29 36 ஜெயரத்தினம் வீரஜெயபரஞ்சோதி – வியாபாரம்- 23 37 கோவிந்தசாமி மகேந்திரன் – வியாபாரம் – 27 38 பொன்னுத்துரை கமலேஸ்வரி – மாணவி -10 39 பொன்னுத்துரை தங்கரத்தினம் – வியாபாரம்- 56 40 பொன்னுத்துரை மகேஸ்வரி – வீட்டுப்பணி – 49 41 பொன்னுத்துரை மஞ்சுளாதேவி -வீட்டுப்பணி – 28 42 பொன்னம்பலம் கனகசிங்கம் -ஊழியர் -41 43 பொலோறஞ் அரியமலர் இராசசிங்கம் – வீட்டுப்பணி – 65 44 தேசிங்கன் செல்லையா -மாணவன் 14 45 டொனால்ட் நவீன் குண்டேக்ஸ் -மின்சார ஊழியர் -20 46 சோமசுந்தரம் சின்னாச்சி -வீட்டுப்பணி -38 47 செல்லத்துரை தயாபரன்- மாணவன் -16 48 செல்லத்துரை ரெங்கநாதன் -கமம் -32 49 வெற்றிவேலு சிவசிறி -மாணவன் -18 50 வேலுப்பிள்ளை குணபாலசிங்கம் -தொழிலாளி -30 51 வேலுப்பிள்ளை தங்கம்மா – 72 52 வேலுப்பிள்ளை யோகேஸ்வரன் -நடத்துநர் -19 53 ஞானமுத்து இரஞ்சிதமலர் -ஓய்வூதியர் -63 54 சுப்பிரமணியம் பரந்தாமன் -மாணவன் -12 55 சுப்பையா .பொன்னம்மா -வியாபாரம் -60 56 சின்னவன் நாகமுத்து -கமம் -76 57 சின்னவன் செல்லையன் -தொழிலாளி -45 58 சின்னராசா அருமைராசா -மெக்கானிக் -33 58 சின்னராசா அருமைராசா -மெக்கானிக் -33 59 சின்னையா அம்பிகைபாலன் -தொழிலாளி -27 60 சிதம்பரப்பிள்ளை குமாரசாமி -வியாபாரம் -52 61 சிவக்கொழுந்து மகேஸ்வரன ; -நகைத்தொழில் -55 62 சண்முகம் பரராசசிங்கம் -வியாபாரம் -34 63 வன்னியசிங்கம் பாஸ்கரன் -மாணவன் -19 64 விசுவநாதன் கந்தையா -வியாபாரம் -59 65 எலியாஸ் சிறாயுதீன் -வியாபாரம் -27
குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.