
இலங்கை ஜனாதிபதி ரணில் இருநாள் பயணமாக கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரி பண்ணையாளர்களால், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு செங்கலடியில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தலைவி அ. அமலநாயகி மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொலிசாரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு இழுத்துச்செல்லப்பட்டு
சிங்கள பௌத்த இனவாத அரசின் கோர முகத்தை வெளிப்பட்டுத்தயிருந்தது.
சமகாலத்தில் வீதியை மறித்து மட்டக்களப்பில் பௌத்த பிக்கு போராட்டம் செய்தது மாத்திரம் அல்லாது இலங்கை ஜனாதிபதியின் பதாதைக்கு தும்புத்தடி, வாருகல் மூலம் அடித்து தனது எதிர்பை தெரிவித்திருந்தார்.
இவை அனைத்தும் கடந்து ஒரு மாத காலத்தின் பின்னர் இன்று பொலிசார் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ. அமலநாயகி மற்றும் 35 பேர்மீது போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி வழக்கு தொடர்ந்தது மாத்திரம் இன்றி அவர்களை விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைக்காக வந்த பொலிசாரிடம் ஏன் பௌத்த பிக்கு மேற்கொண்ட வன்முறைக்கு வழக்கு தொடராத நீங்கள் உரிமைக்காக போராட்டம் மேற்கொள்ளும் எங்கள் மீது மாத்திரம் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள் என வினாவிய போது தங்களிடம் பதில் இல்லை என கூறி நழுவிச் செப்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

