
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்ந்து 33 தினங்களாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
சிங்களவர்களின் ஜனாதிபதியான ரணில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து அனுப்பி விட்டு பித்தலாட்டம் ஆடி இருக்கிற நிலையில் நேற்றையதினம் சிங்கள பேரினவாத பௌத்தபிக்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் வழிநடத்தலில் நேற்றுமுன்தினம் (15.10.2023) புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமல்லாது நேற்றிரவு பண்ணையாளர்களின் மாடுகளை சுட்டு வீழ்த்தியுள்ள கொடூரமான இழிவான
செயலை சிங்கள பேரினவாதம் மேற்கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்ர சாணக்கியன், ஜனா மற்றும் இலங்கை அரசின் பினாமி பாராளுமன்ற உறுபினர்களான பிள்ளையான், வியாளேந்திரன், கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர்களை அழைத்த ரணில் இவர்களுடன் கலந்துரையாடி விட்டு பொய் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.
இந்த சந்திப்பு இடம்பெற்ற மறுநாள் ஏறாவூர் பிரதேசபை செயலாளர் பண்ணையாளர்களின் போராட்ட இடத்திற்கு சென்று அவர்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி சென்றிருந்தார் அதே தினத்தில் முன்நாள் கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் தமிழர் தேசத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அது மாத்திரம் இன்றி பண்ணையாளர்களின் கால்நடை ஒன்றும் நேற்றைய சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
தமிழர் தாயகம் பறிபோவதை யாரிடம் முறையிடுவது என மக்கள் நிர்கதியற்று தவிக்கின்றனர்.

