யாழ்ப்பாணம் வந்தடைந்தது செரியாபாணி கப்பல்.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இந்திய பயணிகள் கப்பலான செரியாபாணி கப்பல்  இன்று சனிக்கிழமை (14) காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான குறித் கப்பல் சேவையை இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணைய வழியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இக் கப்பலானது நாளாந்தம் நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கையை வந்தடையும்.

நாளாந்த கப்பல் சேவை

அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தை சென்றடையும்.

நாகாபட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான 64 கடல் மைல்களைப் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 26,750 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படடகின்றது.

இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு பயணிகள் தயார் நிலையில் உள்ள நிலையில் கப்பல் மீண்டும் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணம் கான்கேசன்துறைக்கு வந்த கப்பலை துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் , கடற்றொழில் அமைச்சர், யாழ். இந்தியத்துணை தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் வரவேற்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்