
தமிழர்களுக்கு இடம்பெற்ற, இடம்பெற்றுவருகின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சுவிஸ் நாட்டின் ஜெனிவா மாநிலத்தில் உள்ள ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் முன்னர் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் கடந்து 14 வருடங்களாக தமிழின அழிப்பு சாட்சியங்களாக விளங்குகின்ற ஆவணங்கள், புகைப்படங்களை தொகுத்து காட்சிப்படுத்தல் மற்றும் ஆங்கிலம், பிரஞ்சு, யேர்மன் ஆகிய மொழிகளில் எம் மீது திணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரங்களை தயாரித்து மனித உரிமை கூட்டத் தொடர் இடம்பெறுகின்ற வேளைகளில் வேற்று நாட்டவர்களுக்கு வினியோகித்து எமது போராட்டம் சார்ந்த விபரங்களை கூறி வருகின்ற அனைத்துலக மனித உரிமை சங்கத்தின் இணைப்பாளர் கஜன் அவர்கள் 54ஆவது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கூட்டத் தொடர் பங்குபற்றி நிழல்பட காட்சிப்படுத்தலுடன் சபையின் உள்ளேயும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் ஊடாக தனது குழுவினருடன் இணைந்து சில நாட்டின் மனித உரிமைகளுக்கான அரச பிரதிநிதிகளுடன் சந்திப்பினை மேற்கொண்டு தமிழர் தரப்பு பிரச்சினைகளை எடுத்து கூறியுள்ளதாக தகவல் தெரிவித்தார்.





தமிழர்கள் சிலர் களியாட்ட நிகழ்வுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எமது போராட்டாத்திற்கும் கொடுக்க வேண்டும் எனவும் வருகின்ற ஆண்டும் 55 ஆவது மனித உரிமை கூட்டத் தொடரில் தங்களது அமைப்பு முழுவீச்சுடன் தங்கள் கடமையை செய்ய உள்ளதாக எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்.