
இலங்கை அரசானது சர்வதேச நாடுகளில் கடனை பெற்று சட்டவிரோத விகாரைகளை கட்டுவதற்கும் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர் என அனைவருக்கும் சம்பளம் வழங்குவதற்கும் அவர்கள் மேற்கொள்ளும் களியாட்ட நிகழ்வுகளுக்கும் நிதியை வீணாக்குவதாகவும். நாட்டின் தற்சார்பு பொருளாதாரம் சார்ந்து அரசு சிந்திக்காது அமேரிக்கா,சீனா, இந்தியா மற்றும் பல நாடுகளுக்கு இலங்கையை கூறுபோட்டு கொடுக்கின்ற செயற்பாடுகளை மேற்கொள்ளுவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் தான் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர் மற்றும் ஏனைய தமிழ் உறவுகளுக்கான நீதிக்காகவும் தாயகத்தில் இடம்பெற்ற, இடம்பெறுகின்ற தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த 14 வருடங்களாக நீதி கோரி பயணிப்பதாகவும் தமிழர்களுக்கான நீதி காலதாமதமாகுவதாகவும் உலகின் பல பாகங்களில் இடம்பெறும் யுத்தங்கள் தமிழர்களின் நீதிப்பொறிமுறை சார்ந்த விடயங்களை திசை திருப்பும் வண்ணம் அமைவதாகவும் குறிப்பாக ரஸ்யா, உக்கிரைன் போர் மற்றும் தற்போதைய பலஸ்தீன் இஸ்ரேல் போர்களால் இதுபோன்ற நிலமைகள் தமிழர்களின் நீதிக்கான வழிகளில் திசைதிருப்பமான காரணமாக அமைவதாக கூறினார். எந்த இடர் வந்தாலும் தமிழர்களுக்கான போராட்டத்தில் தான் தொடர்ந்து பங்கெடுப்பதாக 54வது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்.