
13.10.2023
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினராகிய நாம் பின்வரும் விடயம் தொடர்பில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடனான சந்திப்புக்காக நாளைய தினம் பிரான்ஸ் நாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பில் எட்டு மாவட்ட நிர்வாகத்தின் தலைவி, செயலாளர், மட்டக்களப்பு மாவட்டத் தலைவி, முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஆகியோரின் படங்கள் எங்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி நால்வரும் இன்றைய தினத்திலும் தாயகத்திலேயே உள்ளோம்.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி சில தனிப்பட்ட சிலரும் சில வெளிநாட்டு சக்திகளும் தங்கள் சுயலாபத்திற்காக இந்த முறையற்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை எம்மால் அறியமுடிகிறது. எனவே தயவு செய்து எங்கள் புலம்பெயர் சொந்தங்கள் இவர்களின் சதிவலைக்குள் சிக்கி பணத்தை இழக்கவேண்டாம் எனவும், நாம் எந்த பணம் சேர்க்கும் நடவடிக்கையிலும் புலம்பெயர் தேசத்தில் ஈடுபடவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி

