
அரசியல் கட்சிகள் ரீதியில் வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து எம்மவர்களுக்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என 54வது மனித உரிமை கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக சுவிஸ் நாட்டில் ஜெனிவா மாநிலத்திற்கு வருகை தந்துள்ள முன்நாள் வடமாகாண சபை அமைச்சர் ஆனந்தி சசிதரன் அவர்கள் ஜெனிவா மனித உரிமை சபையின் உள்ளே கலந்துரையாடிய போது இவ்வாறு எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் அண்மை காலத்தில் தீயாக தீபம் லெப். கேணல் தீலிபன் அவர்களின் ஊர்வலத்தின் போது பாராளமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டும் இரு நாட்கள் முன்னர் சாணக்கியன் போன்ற தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் பௌத்த பிக்குவால் கெட்ட வார்த்தைகளால் பேசி தாக்க போவதாக கூறும் போதும் தமிழர்கள் வேடிக்கை பார்ப்பதாகவும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயற்பாடுகள் இடம்பெற்றால் தமிழ் மக்களாகிய நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் தமிழ் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.