இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஅவர்கள் இருநாள் பயணமாக நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரி பண்ணையாளர்களால் போராட்டம் ஒன்றினை இன்றைய மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு செங்கலடியில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் பெருமளவான மக்களின் பங்களிப்புடன் போராட்டம் ஆரம்பமாகிய நிலையயில் பொலிஸாருக்கும் – போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள், பொலிஸாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்ட நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டில் இன மத ரீதியான பக்கச்சார்புடனுடம் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் இலங்கை அரசும், அதன் காவல்துறையினரும் செயற்படுவதுடன் நில ஆக்கிரமிப்பு பௌத்த மயமாக்கத்தில் ஈடுபடுகின்றீர்கள் , ஈஸ்டர் தாக்குதலுக்கு நம்பிக்கையான விசாரணை இல்லை, சிறுவர்களும் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் உள்ளார்கள் ஆகவே எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என தெரிவித்து பதாதைகளை தாங்கி இருந்தனர்.

இச்சம்பவத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தலைவி அ. அமலநாயகி மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொலிசாரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு இழுத்துச்செல்லப்பட்டனர்.
இதனூடாக சிங்கள பௌத்த இனவாத அரசின் கோர முகம் வெளிப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்ததுடன் உடனடியாக சர்வதேசம் தலையிட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்