
இன்றைய தினம் (26.09.2023) தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபத்தின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கின்றது அத்துடன் யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும்
தேசப் புதல்வனுக்கு தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தினர்.




















அதே நாளில் சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா அவர்களதும் 36வது ஆண்டு நினைவுநாளும் வான்படை சிறப்புத்தளபதி கேணல் சங்கர் அண்ணா அவர்களது 22 நினைவுநாள் சார்ந்த நினைவெழுச்சி நாள் வணக்க நிகழ்வு தமிழர் மரபிற்க்கு அமைவாக தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து வருகை தந்த பெருந்திரளான தமிழ் மக்கள் மலர் தூவி, தீபமேற்றி தங்கள் வணக்கத்தினை தெரிவித்து கொண்டனர்.
இந்நிகழ்கவில் பல இளையவர்கள் கலந்துகொண்டு தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா, வான்படை சிறப்புத்தளபதி கேணல் சங்கர் அண்ணா அவர்களது பாடல்கள், கவிதை, நினைவு உரை என்பவற்றை வழங்கியிருந்தனர்.
சமநேரத்தில் போராட்டக்களத்தில் பயணித்த போராளிகளால் போராட்ட களத்தில் இரு துருவங்களுடனான தங்கள் வாழ்க்கை,அனுபவம் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பு பற்றிய விபரங்கள் அனுபவ பகிர்வினை உரையாக ஆற்றியிருந்தனர்.
அதன் பின்னர் தமிழீழ தேசியக் கொடி கையேற்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நினைவெழுச்சி நாள் இனிதே நிறைவுற்றது.
நினைவெழுச்சி நாள் நிகழ்வினை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – சுவிற்சர்லாந்து மக்களை ஒருங்கிணைத்து நிகழ்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






