
சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில்அமைந்துள்ள அருள்மிகு சிவனாலயத்தில் தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய நினைவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணாவின் சிறப்புப் வணக்க நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட அடியார்கள் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தி தீபம் ஏற்றி மலர்தூவி வழிபட்டனர்.
உலகம் பூராகவும் தியாக தீபம் தனை மக்களுக்காக உருக்கி தியாக வேள்வி செய்த காலப்பகுதில் ஆலயங்கள், பல்கலைக்கழகங்கள் பொது நிகழ்வுகள் என அனைத்து இடங்களிலும் இவ்வாறான வழிபாடுகளை மேற்கொள்வது தற்போதைய அடுத்த தலைமுறையினருக்கு ஒரு நினைவுப்பகிர்வாக அமைவதாக மக்கள் கருத்து வெளிப்படுத்துகின்றனர்.