சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை 30.09.23 அன்று பேர்ண் மாநகரில் காலை 10:00-17:00 மணி வரை 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர்களை ஒன்றிணைத்து ஒரு மாநாடு நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது .

இந்த மாநாட்டின் நோக்கங்களாக:

தமிழ் இளையோரிடையே தொடர்புகளை ஏற்படுத்துதல் .

தமிழ்க்குமுகாயம் சார்ந்த அவர்களது பணிகளைப் பரவலாக்குதல் .

தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தமிழ்க் கலைகளைப் பேணிப்பாதுகாத்து வளர்ப்பதில் தமிழ் இளையோரின் பங்கு தொடர்பில் ஆராய்தல் .

தமிழ் இளையோர் மாநாடு 9 தமிழ்க் கல்விப்பணி தொடர்பில் தமிழ் இளையோரின் பங்களிப்பை ஊக்குவித்தல் .

புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ் மக்களுக்கான சேவைகள் தொடர்பில் ஆராய்தல் .

தாயகத்திலுள்ள மாணவர்களின் கல்வி, இளையோர் மேம்பாடு மற்றும் தமிழ் மக்கள் குமுகநலன் தொடர்பில் ஆராய்தல் .

உலகமெங்கும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து சிறப்புற்று விளங்கும் இளையோரின் பட்டறிவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் .

பல்வேறு நாடுகளிலும் பல்வேறு தளங்களிலும் தமிழ் இளையோரின் ஆளுமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வழிவகைகளை

ஆராய்தல்.

இவ்வாறான நோக்கங்களுடன் நடக்கவிருக்கும் மாநாட்டுக்காக 16 வயதிற்கு மேற்பட்ட இளையவர்களை தமிழ்க்கல்விச்சேவை அழைத்து நிற்கிறது.

பங்குபற்றுபவர்கள் https://www.tamilschool.ch/im23/ என்ற இணைப்பை அல்லது படத்தில் உள்ள QR code மூலம் பதிவு செய்யவும்.

TAMIL YOUTH CONFERENCE

பேர்ண் மாநிலத்தில்
முகவரி:
OBERSTUFENZENTRUM KÖNIZ, SCHWARZENBURGSTRASSE 321, 3098 KÖNIZ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்