சுவிற்சர்லாந்து நாட்டில் 1995 ல்ஆரம்பிக்கப்பெற்ற தமிழ்க்கல்விச்சேவை 28 ஆவது ஆண்டாகத் தமிழ் கல்விப்பணியை ஆற்றிவருகிறது.
சுவிற்சர்லாந்தில் பதிவுசெய்யப்பெற்ற அமைப்பாக மாநிலக்கல்வித்திணைக்களங்களுடன் இணைந்து அவர்களின் ஆங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது.
தற்போது நாடு முழுவதிலும் 108 தமிழ்ப்பள்ளிகளுடன் 4000 வரையிலான தமிழ்க்குழந்தைகள் தாய்மொழிக்கல்வி கற்பிக்கப்படுகிறார்கள் .
02.09.23 அன்று நடைபெற்ற முத்தமிழ்விழாவில் ஆண்டு 10,12 நிறைவுசெய்த மாணவர்கள் , 10,20,25 ஆண்டுகள் தமிழ்க்கல்விப்பணியினை நிறைவுசெய்து சிறப்பினைப்பெறும் மாநில இணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் போன்றோர் மதிப்பளிக்கப்பட்டார்கள். இவர்களுக்கான மதிப்பளிப்பை வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் ஐயா, முனைவர் மனோன்மணி அம்மா அவர்களும் மற்றும் கல்விச்சேவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பார்த்திபன் கந்தசாமி அவர்களும் வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஓவியப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இடையிடையே மாணவர்களின் தமிழ்ப் பாரம்பரிய கலாச்சார கலைகளும் அரங்கேறியது. மண்டபம் நிறைந்த தமிழ் மாணவ கல்விச்சமுகத்துடன் முத்தமிழ்விழா இனிதாக நிறைவுபெற்றது.