
கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வலியுறுத்தி இன்று முதல் மைலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும்வரை மட்டக்களப்பு சித்தாண்டியில் காலவரையறை அற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.
சட்டவிரோதமாக அத்துமீறி குடியேறியுள்ள அம்பாறை பொலநறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களை வெளியேறுமாறும் நீதிமன்ற தீர்ப்பினை வலியுறுத்தியும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
தீர்வு கிடைக்காதபட்சத்தில் சுழற்சிமுறை உண்ணாவிரதமாக ஆரம்பித்து அதற்கும் தீர்வில்லையென்றால் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தினை நடாத்தவுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.







