
தீயாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 36 வது நினைவு தினத்தினை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் வரையான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய வாகன ஊர்த்தி ஆரம்பமாகியுள்ளது.
இந்த வாகன ஊர்த்தி இன்று தென் தமிழீழம் ,பொத்துவில் நகரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. இந்நினைவு தின வாகன ஊர்த்தியின் ஆரம்ப நிகழ்வை பொத்துவில் நகரில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பித்து வைத்திருந்தனர்.
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலில் 1 ஆம் நாள் நினைவேந்தல் நாளில் பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி பொத்திவிலில் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அம்பாறை மக்கள் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகிய பயணத்தில் இணைந்து நினைவேந்திவருகின்றனர்.
தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன பேரணி பொத்துவில் நகரில் ஆரம்பமாகி, அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஊடாக எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் நிறைவு செய்யப்படவுள்ளது.







