
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமெனக்கோரி காணி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலானோர் கடந்த மே 03 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு கட்டமாக போராடி வருகிறார்கள்.
போராட்டக்காரர்களை அச்சுறுத்தி மிரட்டி அடியணிய வைத்து வெளியேற்றும் முயற்சியில் சிங்கள பொலிஸ் பொறுப்பதிகாரி ஈடுபட்ட போதிலும் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக நடைபெற்றது.






இந்நிலையில் இன்று செய்வாய் கிழமை சட்டவிரோத விகாரையை சுவீகரித்துக்கொள்ள சிங்கள பேரினவாத அரசின் நிலம் அளவை திணைக்களம் சதி திட்டம் திட்டமிட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
குறித்த அளவீட்டுபணி நடைபெறும் நிலையில் அந்த இடம் நிரந்தரமாக சிங்கள பேரினவாத அரசுக்கு பறிபோகும் நிலை உள்ளது இவற்றை கருத்தில் கொண்டு இந்த சதித்திட்டத்தை முறியடிக்க இன்று செவ்வாய் கிழமை பலாலி தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக தமிழர் நிலத்தை பாதுகாக்க மக்கள் போராடுகின்றனர் .
குறித்த போரத்தில் போராட்டக்காரர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஸ் மற்றும் ஏனைய செயற்ப்பாட்டளர்கள் பங்கெடுத்துள்ளார்கள்.