
சிறிலங்கா இராணும் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று நினைவு கூரப்பட்டது.
நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
நினைவேந்தல் நிகழ்வு






சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (9) உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களினால் நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
186 பேர் படுகொலை
கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான் கொக்குவில் பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் என 186 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு நகரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் வடக்கு திசையில் சத்துருக் கொண்டான் கிராமம் அமைந்துள்ளது சத்துருக்கொண்டான் எல்லை கிராமங்களாக திராய்மடு, அரசையடி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. சிறிய குளத்தின் கீழ் வயல் நிலங்களை உள்ளடக்கி இக்கிராமம் அமைந்துள்ளது
1990களின் ஆரம்பத்தில் உள்நாட்டு யுத்தம் மீண்டும் தீவிரமடைந்ததினை தொடர்ந்து சத்துருக்கொண்டானில் பாரிய ராணுவ முகாமினை ஸ்ரீலங்கா ராணுவத்தினர் அமைத்தார்கள் இதனால் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் கோயில்களிலும் பொது இடங்களிலும் தஞ்சம் அடைந்தார்கள் இவ்வாறு தஞ்சமடைந்த மக்களை மீண்டும் அவர்களின் வீடுகளில் சென்று குடியமருமாறு ராணுவத்தினர் கூறியதை தொடர்ந்து மக்கள் தங்களின் வீடுகளில் குடியமர்த்ததார்கள் ராணுவத்தின் கூற்றை நம்பிய தத்தமது வீடுகளில் வசிக்க வந்த மக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள் கைது செய்யப்பட்டவர்களில் எண்பத்தைந்து பேர் பெண்கள்
இவர்களை முகாமில் இருந்த நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் அவர்களின் மார்பகங்கள் கை கால் போன்றவற்றினை வெட்டி மிக மோசமான முறையில் சித்திரவதை செய்து படுகொலை செய்தார்கள் கைது செய்யப்பட்ட ஐந்து குழந்தைகள் உட்பட 68 சிறுவர்களையும் மோசமான சித்திரவதைகளின் பின் சுட்டுக் கொலை செய்ததுடன்17 பேரளவிலான ஆண்களின் அங்கங்களை வெட்டி சித்திரவதை செய்து படுகொலை செய்தார்கள் மொத்தமாக 186பேர் ராணுவத்தால் அங்கு படுகொலை செய்யப்பட்டனர்
ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 21 வயதான கந்தசாமி கிருஷ்ணகுமார் மட்டுமே காயங்களுடன் தப்பி வந்து சம்பவத்தினை வெளிப்படுத்தினார் இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் அமைப்பு சம்பவத்தினை வெளிப்படுத்தியது ஆனால் ராணுவத்தினர் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லை என தெரிவித்துடன் மக்கள் அமைப்பின் தலைவரான திரு அருணகிரிநாதன் அவர்களை மிரட்டி இவ்வாறான சம்பவம் அன்று நடைபெறவில்லை என எழுத்து மூலம் பொய் அறிக்கையினை தருமாறு வற்புறுத்தினர் இதனை அடுத்து மக்கள் அமைப்பின் தலைவர் தனது பதவியினை துறந்தார் இப் படு கொலையில் ராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படையினரும் பங்கு கொண்டு இருந்தனர்