
தமிழர்களின் சுவிஸ் நாட்டின் திச்சினோ மாநிலத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்தின் அங்கத்தவர்கள் பல்லின மக்கள் கலந்துகொண்டு தங்கள் பிரச்சனைகள் பற்றி வேற்றின மக்களுக்கு தெரியப்படுத்தும் உலகம் முழுவதும் ஒரே முற்றத்தில் (“Mondo al Parco” ) என்ற தலைப்பில் நடைபெற்ற பல்கலாச்சார நிகழ்வில் பங்குபற்றி உள்ளனர்.
இந்நிகழ்வு திச்சினோ மாநிலத்தில் Fosit மற்றும் Lugano நகரத்தின் ஒத்துளைப்புடன் 20வது முறையாக நடாத்தப்படுகின்றது.





இங்கு தமிழ் இளையோர் அமைப்பின் செயற்திட்டங்கள், படைப்புகள் பற்றி விளக்கம் அழிக்கப்பட்டதுடன் தமிழர்களுக்கு இடம்பெற்ற தமிழின அழிப்பை பற்றியும் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டதாக அமைப்பின் அங்கத்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் சுவிஸ் மற்றும் பல நாட்டவர்கள் கலந்துரையாடுவதற்க்கான ஓர் இடமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓர் நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமைந்ததாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.