
தமிழீழ தமிழர்களாகிய நாம் எமக்கு இடம்பெற்ற, இடம்பெற்றுவருகின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோருவதற்கும் தமிழர்களுக்கான ஓரே தீர்வு தனித்தமிழீழமே என்பதனை சர்வதேச ஊடகங்களின் ஊடாக சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் வண்ணம் கடந்த 14 வருடங்களாக பல்வேறு தளங்களில் தொடர் பேராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
அதன் தொடர்ச்சியாக இவ்வருடம் ஜெனிவா பத்திரிகையாளர் மையத்தில் 18.09.2023 காலை 10.00 – 11.00 வரை பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற உள்ளது.


இந்த சந்திப்பில் தாயகத்தில் தமிழ் அரசியல் பிரமுகர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயலாளர், புலம்பெயர் தேசங்களில் இருந்து மதகுரு மற்றும் சட்ட ஆலோசகர், தமிழ் இளைய தலைமுறையினர் ஆகியோரின் பங்கெடுப்புடன் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற உள்ளது.

பத்திரிகையாளர் மாநாட்டிற்கான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இதனை சக பத்திரிகையாளர்களுக்கும் வேற்று நாட்டு பத்திரிகையாளர்களுக்கும் தெரியப்படுத்தி, தகவலை பகிர்ந்து அழைத்துவருமாறு தயவாய் கேட்டுக்கொள்கின்றோம்.
அனைத்துலக தமிழீழ தகவல் மையம்.
பத்திரிகையாளர் சந்திப்பிற்கு இணைந்துகொள்ள:
Please find below different links for event:
Link on the webpage: Club suisse de la presse – Geneva Press Club | Support for justice: Genocide of Tamils in Sri Lanka
Link to the invitation: Support for justice: Genocide of Tamils in Sri Lanka (campaign-archive.com)
Link to the registration for In-person participation: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScJDDiumdOCjdeSBOzYSunfw5VNFUH19WRPwBDpOBqcaPqZmg/viewform?usp=sf_link
Link to the registration for ONLINE participation: https://us06web.zoom.us/meeting/register/tZUtdeyhrDwuGtL6pu_FOuUo8_RstYDbmrPE
Feel free to share these links with your media and journalist network.