
தமிழ்மக்கள் மீது தொடர்ந்து நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பிரித்தானிய நாட்டின் பிரதமர் இல்லத்தின் முன்பாக ஆரம்பித்து, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஊடாகப் பயணிக்கும் மனித நேய ஈருருளிப் பயணமானது 13.09.2023 புதன் மாலை 17:10 மணிக்கு பாசல் நகரை வந்தடைந்து சுவிசின் பிரதான நகரங்களிற்கு ஊடாகப் பயணித்து 18.09.2023 திங்கள் அன்று ஐ. நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை வந்தடைகின்றது.

சுவிசின் Basel, Solothurn, Lyss, Bern, Fribourg, Payerne, Lausanne, Nyon, Geneva ஆகிய நகரங்களிற்கு ஊடாகப் பயணிக்கும் இவ் மனிதநேயப் பயணத்தில் கலந்து கொண்டு சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பினை அனைத்துலகத்திற்கு எடுத்துரைக்க ஈருருளிப் பயணத்தில் அனுபவமுள்ளவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
-சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு