
இந்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள்சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ளஅறிக்கையின் பிரதி இலங்கை வெளிவிவகாரஅமைச்சகத்திற்கு கடந்த வாரம்அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அறிக்கை கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளஇலங்கையின் இராஜதந்திர வட்டாரங்கள், அதற்கானபதிலை இலங்கை அரசு இன்று (5) அனுப்ப வேண்டும்என தெரிவித்துள்ளன.
எதிர்வரும் 11 ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள்ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ளஅறிக்கையில் இனநல்லிணக்கப்பாடு, 13 ஆவதுதிருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், உண்மைகளை கண்டறிவதற்கான குழுவை அமைத்தல், மாகாணசபைகளை பலப்படுத்துதல், காணி மறுசீரமைப்பு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் மறுசீரமைப்பு, அரசியல்கைதிகளை விடுவித்தல், உழல்களை ஒழித்தல் போன்றவிடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடையங்கள் தொடர்பில் இலங்கை அரசு தனதுபதில்களை தயாரித்து வருவதாக கொழும்பு தகவல்கள்தெரிவித்துள்ளன.