பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும்  மிதியுந்துப்பயணம். 

வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர் இல்லம் நோக்கி எழுச்சியோடு செல்கின்றது.

இப்பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதான ஆளும், எதிர்க்கட்சி அலுவலகங்களுக்கும் 

உள்நாட்டு , வெளிநாட்டு அமைச்சு அலுவலகங்களுக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் எமது கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கையளிக்கப்படவுள்ளன. இம்மனுக்களில், சிறிலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்ப நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் சிறிலங்கா தேசத்திற்கெதிராக உடனடியாகக் காத்திரமான நடவடிக்கையில்  பிரித்தானிய அரசாங்கம் ஈடுபடவேண்டும் என்றும் தமிழின அழிப்பிற்கான நீதியை நிலை நாட்ட வேண்டும் என்றும் தமிழீழ மக்களுக்கான நிரந்தர அரசியற் தீர்வாக சுதந்திர தமிழீழமே அமைய வேண்டும் என்றும் இம்மனுவில் தெளிவாகச்சு ட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தமிழ் இளையோர் TYO-UK அமைப்பால் தயாரிக்கப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான ஆவணச் சிறு வெளியீடுகளும் பொது மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. 

இன்று எழுச்சியோடு தொடங்கப்பட்ட இப்போராட்டப்பயணமானது 

நாளை கொலண் வழியாகச் சென்று ஏனைய ஐரோப்பிய நாடுகளூடாகப் பயணித்து, 18/09/2023 சுவிஸ் ஐ.நா திடலில் நடை பெறும் பேரணியில் பேரெழுச்சியோடு  இணையத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்பேரணியில் அனைத்து நாடுகளில் இருந்தும் தேசியச் செயற்பாட்டாளர்களும்,

தேசப்பற்றாளர்களும் இணைந்து ஐநா மன்றம் முன்பாக எமது தமிழீழ தேசத்தின்  தேசியக் கொடியை ஏற்றி, எமது அரசியல் அபிலாசைகளை உறுதியோடு முரசறைய இருக்கின்றார்கள்.எனவே இப் போராட்டப் பயணத்தைப் பலப்படுத்துமாறு உரிமையோடு அறைகூவல் விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்