
மனித உரிமைகள் ஆணையகத்தின் 54 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் 31.08.2023 இன்று பிரித்தானியா பிரதமர் இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் ,ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக 18.09.2023 அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கு வந்தடைய உள்ளது.
இந்த ஈருருளி பயணக்கவனயீர்ப்பு குறித்தும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் 18.09.2023 ஆம் நாள் அன்று நடக்கும் மாபெரும் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து இனமான இயக்குனர் திரு . புகழேந்தி தங்கராஜ் அவர்கள் உலகத்தமிழர்களுக்கு விடுத்துள்ள அழைப்பு காணொளி இணைப்பு கீழே.