சுவிற்சர்லாந்தின் 732 ஆவது சுதந்திர நாள் இன்று

41283 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 8.5 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.

26 மாநிலங்களாக பிரிக்கப்பட்டு அதிக சுயாட்சியைக் கொண்டுள்ளதால் மக்கள் அதிகளவு சுதந்திரங்களை அனுபவிக்கின்றனர்.

அல்ப்ஸ் , யூரா மலைகளும் றைன் , ரோன் நதிகளும் அதன் நீரேரிகளும் இந்நாட்டுக்கு அதிக அழகையும் செழிப்பையும் வழங்குகின்றது .

பாற்பண்ணைக் கைத்தொழில் .கைக்கடிக்கார உற்பத்தி , வங்கி மற்றும் காப்புறுதித்துறை , சுற்றுலா மற்றும் அதுசார்கைத் தொழில்கள் ,சாக்லெட், வைன் உற்பத்தி போன்றன அதிக வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளாகவும் உள்ளன .

சுவிஸ் நாட்டின் அரசகரும மொழிகளாக German (Deutch) , French , Italian , Romanch ஆகிய மொழிகள் விளங்குகின்றன.

பேர்ண் (Bern) நாட்டின் தலைநகராகவும் , சூரிச் (Zurich ) கைத்தொழில் ,வியாபார நகராகவும் ஜெனீவா (Geneva ) சர்வதேச நகரமாகவும் விளங்குகின்றன .

அமைதி , தூய்மை , சுகாதாரம் , அழகு , பாதுகாப்பு , என்பவற்றை விரும்பும் மக்கள் அதிகளவில் இந்நாட்டுக்கு வருகை தருகின்றனர்.

சில இடங்களில் ஒடுக்கு முறை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் எது எப்படி இருந்தாலும் மனிதாபினம் பலராலும் வரவேற்கப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்