
சுவிஸ் நாட்டில் திச்சினோ மாநிலத்தில் 8வது முறையாக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தபடுகின்ற sports4rights விளையாட்டுப்போட்டி 03.09.2023 Mendrisio நகரில் Via Agostino Maspoli என்னும் இடத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்த விளையாட்டுப் போட்டியின் மூலம் கலந்துகொள்ளும் பாதிக்கப்பட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இடம்பெற்ற இன்னல்கள், இன அழிப்பு சார்ந்த விபரங்களை ஏனைய நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு போட்டியாக இந்த போட்டி இடம்பெறுவது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த போட்டியின் ஆரம்பத்தில் தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடிய தியாக தீபம் திலீபன் அண்ணாவை நினைவு கோருவதுடன் தமிழ் மாணவர் அமைப்பின் முதலாவது தற்கொடையாளரான பொன் சிவகுமார் அண்ணாவையும் நினைவுகளுடனும் இவ் விளையாட்டுப்போட்டி நடைபெறுகின்றது.
இவ் விளையாட்டுப் போட்டியில் உதைபந்தாட்டம், கரந்தாட்டம் (set up / overgame) பூபந்தாட்டம், சிறுவர்க்கான விளையாட்டுக்கள் மற்றும் பார்வையாளருக்கான விளையாட்டுகளும் இடம்பெறுவது வழக்கம்.
இவ் விளையாட்டு விழா திச்சீனோ மாநில அரசின் ஆதரவுடன் இடம்பெற்று வருகின்றமை விசேட அம்சமாகும். அத்துடன் இந்த விளையாட்டுப் போட்டியில் 8 வேற்றுநாட்டவர்களது அணிகளும் அவர்களது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றுவதும் சிறப்பம்சமாகும்.
அதே போன்று இம்முறையும் இடம்பெற உள்ள விளையாட்டு போட்டிக்கு அனைவரும் பங்குபெறலாம் என்பதை அறியத்தருகின்றனர் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர்.
இணையத்தின் ஊடாக உங்கள் அணிகளின் பதிவினை மேற்கொள்வதற்கான இணைப்பு கீழே:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSew-UEKTlKLAiaiYGaEUW3LgHLlN8majaISkT213_Yrz7CV4g/viewform

Welcome. I like to follow you with pleasure
Thanks a lot please share our news with your friends & social media platforms