
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் விகாரை. தமிழரின் பெண்தெய்வ வழிபாட்டிற்கு உரித்தான இடமான முல்லைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பு மிகவேகமாக நடந்தேறுவதற்கான அடையாளமே இது. வட்டுவாகல் சப்த கன்னியர் கோயில் அமைந்திருக்கிறது. பண்டைய காலப்பகுதியில் வன்னியை ஆண்ட பெண் அரசிகளால் அமைத்த கோயிலே இது. ஆனால் அந்த வரலாறு விகாரைகளால் அழிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த தொல்லியல் என்ற பேரில் ஆக்கிரமிக்கப்படவிருக்கும் இடங்கள் எவை என்கிற வரைபடத்தை 1970களிலேயே தயார் செய்துவிட்டார்கள். அதனை சிறில் மெத்தியு 1980ஆம் ஆண்டு தனது நூலில் முதன் முறை பகிரங்கமாக வெளியிட்டார் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவார்களோ தெரியாது. மேலே வரைபடத்தை பார்க்கவும்.
இந்த வரைபடத்தில் 42 ஆம் இலக்கத்தைக் குறிப்பது “குருந்தூர்மலை”. 1970ம் ஆண்டில் இலக்குவைக்கப்பட்டுள்ள இடங்கள் மொத்தம் 261 இடங்கள்.
தற்போது அந்த இடங்களின் பட்டியல் மேலும் அதிகரிக்கப்பட்டிருப்பதை சிங்களத்தில் நடக்கும் விவாதங்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. இவற்றில் சுமார் 10 இடங்களின் மீதான ஆக்கிரமிப்பின் மீது தான் நாம் வினையாற்றி வருகிறோம். எண்ணிப் பாருங்கள் எத்தகைய விபரீதம் காத்திருக்கிறது என்பதை.
இவை அனைத்தும் சிங்கள பௌத்த தொல்லியல் சான்றுகளென நிறுவி “தமிழர் பூர்வீக அடையாளத்தை” துடைத்தெறியும் சதியே. புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற தமிழர்களே, தாயகத்தில் தமிழின அழிப்பின் உச்சத்திற்குள் அகப்பட்டிருக்கும் எமது தாயகத்தை மீட்கவும் எமது உறவுகளை காக்கவும் நாம் என்ன செய்யப் போகின்றோம். இயந்திரங்கள் போன்று சுயநல வாழ்க்கைகளை வாழாமல் எமது தேசத்திற்கான பணிக்காகவும் ஒருகணம் சிந்தியுங்கள். இந்த நிலத்தை காக்க நாம் கொடுத்த உயிர்கள் ஏராளம்.
