மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் வெள்ளிக்கிழமை (28) தற்கொலை செய்துள்ளனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மண்டூர் பிரதேசத்தில் 81 வயதுடைய பெண் ஒருவரும், கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேச கடலில் 64 வயதுடைய ஆண் ஒருவரும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரி தொடக்கம் ஜூன் மாதம் வரையிலான 6 மாத காலப்பகுதியில் நான்கு சிறுவர்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதில், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 9 பேரும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் 10 பேரும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 10 பேரும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 13 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 8 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டில் 133 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

எனவே, கடந்த 2022ஆம் ஆண்டின் புள்ளிவிபரத்தையும் இந்த ஆண்டின் 6 மாத கால புள்ளிவிபரத்தையும் ஒப்பிடும்போது, தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய புள்ளிவிபரம் காட்டுகின்றது.

எனவே, அதிகரித்துவரும் தற்கொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்