
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவில் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்ததுடன் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலும் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.



