சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் யேர்மன் மொழி பேசும் வலயமாகிய செங்காளன் மாநிலத்திலும், இத்தாலி மொழி பேசும் வலய மாநில நகரமாகிய மென்றிசியோவிலும் இரு வேறுபட்ட நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

செங்காளன் மாநிலத்தில் கவனயீர்ப்பு நிகழ்வாக அந்த நகரின் மையப்பகுதியில் கறுப்பு ஜூலை சார்ந்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டும், பொதுமக்களுக்கான துண்டுப்பிரசுரம் மூலம் கறுப்பு ஜூலை சார்ந்த விபரங்களைம் சுவிஸ் நாட்டவர்களுக்கும், வேற்று நாட்டவர்களுக்கும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர்களால் எடுத்துக்கூறப்பட்டது.

இத்தாலி மொழி பேசும் வலய மாநில நகரமாகிய மென்றிசியோவில் நகரசபை அரசியல்வாதிகளிக்கும், முதல்வர் மற்றும் வேற்று நாட்டவர்களுக்குமான கறுப்பு ஜூலை சார்ந்த தகவல்கள் அடங்கிய தகவல் கருத்தரங்கு ஒன்றும் இடம்பெற்றிருந்தது இங்கும் சுவிஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் இளையவர்களும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு எமது மக்களுக்கு இடம்பெற்ற தமிழின அழிப்பின் கோரங்களை எடுத்துக்கூறியிருந்தனர்.

அத்துடன் தமிழர்களின் உரிமைக்காக சுவிஸ் நாட்டின் அரசியல்வாதிகளும், நகர முதல்வர்களும் குரல்கொடுக்க வேண்டும் என்பதனையும் அரசின் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்ததாக தமிழ் இளையோர் அமைப்பினர் தகவல் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்