
வட தமிழீழம் :-
உடுத்துறை கடற்கரையில் கடந்த 14 ஆண்டுகளாக ஆக்கிமித்து நிலைகொண்டுள்ள கடற்படையினருக்காக நிரந்தர முகாம் அமைக்கும் நோக்கில் தனியார் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீட்டுப் பணிகள் நடைபெற இருந்தது.
அளவீட்டு நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று அளவீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டபோது காணி உரிமைகளார்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடற்தொழில் சங்கத்தினர் பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அதன் காரணமாக அளவீட்டு நடவடிக்கைகள் இன்று தடுத்து நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் மற்றும் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் திருமதி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் யாழ் மாவட்ட உதவி அமைப்பாளர் பொன்மாஸ்ரர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.