கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்த சங்கரியின் புதல்வர், கரி ஆனந்தசங்கரி சற்றுமுன்னர் பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி பாரியளவில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளது.

லிபரல் கட்சி அமைச்சரவையில் மாற்றம்

கனேடிய லிபரல் கட்சியின் உறுப்பினரான கரி ஆனந்தசங்கரி ஸ்காப்ரோ ராக் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக  கடமையாற்றி வருகின்றார்.

இதேவேளை, கரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கனேடிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகின்றார்.

மேலும், கரி ஆனந்தசங்கரி சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை சட்டத்தரணி மற்றும் சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்