
கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு ஜூலை 23, 1983 தொடக்கம் ஜூலை 29 வரை திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் தமிழர்களை கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் , 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்ட ஒரு பெரும் தமிழின அழிப்பை நிகழ்த்திய கோரமான நிகழ்வாகும். நேற்றுடன் 40 ஆண்டுகள் கடந்தோடிவிட்டது.
நேற்றையதினம் லண்டனில் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் தமிழ் இளையோர் அமைப்பினால் நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது. 10 Downing வீதி முன்பாக நூற்றுக்கணக்கான மக்களுடன் கண்டன போராட்டம் நடைபெற்றது.


