
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தினால் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் 40 வது வருட நினைவேந்தல் நேற்றையதினம் யாழ் கோட்டை முனியப்பர் கோவில் முன்றலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.








