
சுவிட்சர்லாந்தில் சில பகுதிகளில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புக் குழுவினர் போராடிவரும் நிலையில், சுவிஸ் மாகாணம் ஒன்றில், வெளியிடங்களில் தீப்பற்றவைக்க இன்று முதல் தடைவிதிக்கப்படுகிறது.
எங்கு, எதற்கெல்லாம் தடை?
இன்று முதல் Valais மாகாணத்தில், திறந்தவெளியில் தீ பற்றவைக்கவும், பட்டாசுகள் வெடிக்கவும் முழுமையாக தடைவிதிக்கப்படுகிறது.
வறண்ட சூழல் காணப்படுவதால், காட்டுத்தீ பற்றும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், Valais மாகாணத்தின் ஒரு பகுதியில் தீயணைப்புக் குழுவினர் தீயுடன் போராடிவருவதை மக்களுக்கு நினைப்பூட்டியுள்ளார்கள்.
என்றாலும், தனியார் இடங்களுக்குள், சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, பார்பிக்யூ பயன்படுத்த அனுமதி உண்டு என அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.