சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்டை சாப்பிட்ட பிள்ளைகளில் 49 பேர் கடந்த ஆண்டில் நோய்க்கிருமி ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

49 குழந்தைகள் பாதிப்பு

கிண்டர் சாக்லேட் என்னும் சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பாதிப்பு இருந்ததால், அவற்றை சாப்பிட்ட 49 பிள்ளைகள் கடந்த ஆண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்று பெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சராசரி வயது மூன்று!

15 மாகாணங்களில் குழந்தைகள் பாதிப்பு

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெல்ஜியம் தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட Kinder வகை சாக்லேட்டுகளை Ferrero Suisse நிறுவனம் திரும்பப் பெற்றது.

அவற்றில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டதே அவை திரும்பப் பெறப்பட காரணம். அந்த சாக்லேட்டில் பயன்படுத்தப்பட்ட பால் கொழுப்பில் அந்த கிருமி தாக்கம் இருந்ததாக கருதப்படுகிறது.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, 15 மாகாணங்களில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்ட சாக்லேட்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்