இலங்கையில்  உள்ள மத ஸ்தலங்களின் சொத்துக்கள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் அனைத்து மத ஸ்தலங்களும் பதிவு செய்யப்படும் என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மகாநாயக்கர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடன் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதன்படி, எதிர்காலத்தில் கிராம உத்தியோகத்தர்களின் எல்லைக்குள் இருக்கக்கூடிய மத ஸ்தலங்களுக்கான அளவுகோல்களை தயாரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்